மனிதநேய மக்கள் கட்சி 17 ஆம் தொடக்க விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பாக கிழக்கு கடற்கரை சாலையில் (சுமார் 40கிலோமீட்டர் ) கொடியேற்றும் நிகழ்வு



 

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பாக மனிதநேய மக்கள் கட்சியின் 17 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு  கிழக்கு கடற்கரைச் சாலையில் மாவட்ட எல்லை முதல் மாவட்ட முடிவு வரை 40 கிலோ மீட்டர் தூரம்  20க்கும் மேற்பட்ட இடங்களில்  கொடி ஏற்றும் நிகழ்வு  மாவட்டத் தலைவர் B.சேக் தாவூதீன் தலைமையில்  18.01.25  அன்று நடைபெற்றது 

 இதில் சிறப்பு அழைப்பாளராக  மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் தஞ்சை பாதுஷா அவர்களும்  தமுமுக தலைமை பிரதிநிதி மண்டலம் ஜெய்னுல் ஆப்தீன் அவர்களும்  கலந்து கொண்டு கொடியினை ஏற்றி வைத்தார்கள் நிகழ்வில்  மாவட்ட செயலாளர் ஜகுபர் அலி  தமுமுக செயலாளர் ஜெகதை செய்யது மாவட்டத் துணைத் தலைவர் MSK முகமது சாலிகு மாவட்டத் துணை நிர்வாகிகள் பைசல் அகமது,அஜ்மல் கான், அப்துல் ஜலீல்,அக்பர் அலி, சேக் அஜ்மல் கான் உள்ளிட்ட மாவட்ட துணை நிர்வாகிகளும் மாநில செயற்குழு உறுப்பினர் நவாஸ் கான் ரியாத் மண்டல தலைவர்  நூர் முகமது துணைச் செயலாளர் ஆஷிக் இக்பால் மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர்  25க்கும் மேற்பட்ட கார்களில் பேரணியாக சென்று கொடியேற்றும் நிகழ்வில் பங்கேற்றனர்.











எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments