கோபாலப்பட்டிணம் ஆலமரம் பகுதியில் குப்பைகளால் சூழப்பட்டு சேதமடையும் நிலையில் இருந்த குடிநீர் குழாய் வால்வை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பான விரிவான செய்தியை கடந்த 21/07/2026 அன்று GPM மீடியா இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம்.
அச்செய்தியில், குடிநீர் விநியோகக் குழாய் வால்வு குப்பைகளால் சூழப்பட்டு பழுதடைந்து வருவதாகவும், இதனால் அப்பகுதி மக்களுக்குச் சீரான குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டு, ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
துரித நடவடிக்கை
அந்தச் செய்தியின் எதிரொலியாக, ஊராட்சி மன்ற செயலாளர் இன்று 23/07/2026 உடனடி நடவடிக்கை மேற்கொண்டார். அப் பகுதியில் தேங்கிக் கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டு, பழுதடைந்த குடிநீர் குழாய் வால்வுக்குப் பதிலாகப் புதிய வால்வு விரைவாகப் பொருத்தப்பட்டு சீரமைக்கப்பட்டது.
பாதுகாப்பு வேலி அமைக்கப்படும்
இது குறித்து ஊராட்சி மன்ற செயலாளர் கூறுகையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் வால்வைப் பாதுகாக்கும் பொருட்டு, அதனைச் சுற்றி விரைவில் பாதுகாப்பு வேலி அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் நன்றி
மக்களின் பிரச்சனையைக் கவனத்திற்குக் கொண்டு சென்று செய்தி வெளியிட்ட GPM மீடியாவிற்கும், செய்தி வெளியானதன் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுத்த ஊராட்சி மன்ற செயலாளர் அவர்களுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:



0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.