புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள்கள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வை வலியுறுத்தி இன்று 23/07/2026 மாணவர்கள் பங்குபெற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் தொடங்கிய இந்த பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் தொடங்கி வைத்தார். பேரணியானது கோபாலப்பட்டிணத்தின் முக்கிய வீதிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த முதன்மை சாலைகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
பேரணியின் போது, மாணவர்கள் மது மற்றும் போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதகைகளை ஏந்திச் சென்றனர். மேலும், "போதைப்பொருள் சமூகத்தின் பகை", "மதுவை ஒழிப்போம், மனிதநேயம் காப்போம்" போன்ற போதைக்கு எதிரான விழிப்புணர்வு முழக்கங்களை உரக்க எழுப்பியவாறு சென்றனர்.
இந்நிகழ்வில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் திரளாகக் கலந்து கொண்டு போதை இல்லா சமுதாயத்தை உருவாக்க உறுதியேற்றுக்கொண்டனர்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:



0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.