புதுக்கோட்டை, மணமேல்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 120 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாலை மறியல்
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உாிமைகளுக்கான சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில் சாலை மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் அருகே மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். போராட்டத்தில் சிலர் தங்களது 3 சக்கர மோட்டார் வாகனங்களிலும், மாற்றுத்திறனாளிகளும் திரளாக பங்கேற்றனர்.
80 பேர் கைது
மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை ஆந்திரா போன்று ரூ.6 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். ரூ.1,000, ரூ.2 ஆயிரம் உதவித்தொகைக்கு விண்ணப்பித்து உதவித்தொகை கிடைக்காமல் நீண்ட காலமாக காத்திருக்கும் அனைவருக்கும் உடனே உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின் போது கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர். இதில் 30 பெண் மாற்றுத்திறனாளிகள் உள்பட 80 பேர் கைதாகினர். மேலும் அவர்கள் அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் போலீசார் தங்க வைத்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
மணமேல்குடி
மணமேல்குடி தாலுகா அலுவலகம் முன்பு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஒன்றிய தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சுரேஷ், ஒன்றிய பொருளாளர் ஆரோக்கியசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் பல்வேறு விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதைடுத்து போலீசார் பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.