மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் ஆர்.புதுப்பட்டினம் ECR உப்பளம் மஸ்ஜித் அல் ஹமீது புதிய பள்ளிவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தியாவில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்துவதில் முன்னிலை வகிப்பது தமிழகம் என்றால் மிகையில்லை. அதற்கு எடுத்துக்காட்டாக எண்ணற்ற மத நல்லிணக்க நிகழ்வுகள் நாள்தோறும் நடைபெற்ற வண்ணம் உள்ளது அதில் ஒன்றாக இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணி புரசக்குடி ஊராட்சி ஆர். புதுப்பட்டிணம் ECR உப்பளம் மஸ்ஜித் அல்ஹமீது பள்ளி வாசல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் மட்டுமில்லாமல் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் அனைத்து மதத்தினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு பங்கேற்று மத நல்லிணக்க கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஆர்.புதுப்பட்டினம் ஜமாத் தலைவர் J. பிரியம் முகமது அப்துல் காதர் தலைமை வகித்தார். ஆர்.புதுப்பட்டினம் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர். மௌலானா மௌலவி. அல்ஹாஜ். M.ஜமால் முஹைதீன் மன்பஈ புதிய பள்ளிவாசலை திறந்து வைத்தார். இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் K.நவாஸ்கனி, அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST. ராமச்சந்திரன், S.M. ராஜநாயகம் ExMLA, இ.ஏ. ரெத்தினசபாபதி ExMLA, S.M. சீனியார் Exசேர்மன்,குப்புராஜா Ex VC, K.N.A. லியாக்கத் அலி, கூடலூர் முத்து உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு ஆலத்தூர் கிராமத்தார்கள், உப்பளம் கிராமத்தார்கள், வேங்காகுடி கிராமத்தார்கள், பொன்னமங்களம் கிராமத்தார்கள், முத்துக்குடா கிராமத்தார்கள், ஆர் புதுப்பட்டிணம் கிராமத்தார்கள், மீமிசல் கிராமத்தார்கள் சத்திரம்பட்டினம் கிராமத்தார்கள், சிறுகடவாக்கோட்டை கிராமத்தார்கள், நாட்டானி புரசக்குடி கிராமத்தார்கள் மற்றும் சுற்றுவட்ட்டார கிராமத்தார்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டு பங்கேற்றனர்.
புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சியில் மத பேதமின்றி ஒருவருக்கொருவர் தங்களிடத்தில் நிலவும் ஒற்றுமை மற்றும் அன்பு பறிமாற்றங்களை கருத்துகளாக பகிர்ந்து கொண்டது அனைவரையும் மகிழ செய்தது.
பள்ளிவாசல் கட்டுமான பணியை OMS குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். பள்ளிவாசல் திறப்பு விழா ஏற்பாடுகளை புதுப்பட்டிணம் முஸ்லிம் ஜமாத்தார்கள் வெகு சிறப்பாக செய்தனர். பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் ஆர்.புதுப்பட்டினம் ஜமாத் மற்றும் அல் அமின் இஸ்லாமிய இளைஞர் பேரவை இன் முகத்துடன் வரவேற்றனர். விழாவில் கலந்து கொண்ட சுமார் 4000 பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு வியாழக்கிழமை பெண்களுக்காக பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 2000 பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
மஸ்ஜித் அல்ஹமீது பள்ளிவாசல் திறப்புவிழாவை முன்னிட்டு புதூர் மீனவர் கிராமங்களில் இருந்து அப்பகுதி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் மேளதாளம் வாணவேடிக் கையுடன் தாம்பூல தட்டுடன் தலையில் சீர்எடுத்து சுமந்து வந்த பெண்கள் அனைவரையும் ஆர்.புதுப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் சார்பில் கைதூக்கி வணங்கியும், கட்டித் தழுவியும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு மத நல்லினாக்கத்தோடு மீனவ கிராமங்களிலிருந்து சீர்கொண்டு வந்த சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.