ஆவுடையார்கோவில் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். உதவி பொறியாளர்கள் அருண்ராஜ், ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆவுடையார்கோவில் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங், ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாகரன் ஆகியோர் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் தொடங்கிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் ஆவுடையார்கோவில் 4 வீதிகளையும் சுற்றி வந்து இறுதியில் அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில் நெடுஞ்சாலை துறையை சேர்ந்த சாலை பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு ெஹல்மெட் அணிவீர் உயிரிழப்பை தவிர்ப்பீர். உரிமம் வாங்க எட்டுப்போடு உயிரைக் காக்க ஹெல்மெட் போடு, சாலையில் அலைபேசி பயன்படுத்துவது ஆபத்தாகும். நீ யோசி, மது அருந்தி வாகனம் ஓட்டாதீர், போதையில் பயணம் பாதையில் மரணம், மிதவேகம் மிக நன்று உள்ளிட்ட பதாகைகளை கையில் ஏந்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கொடுத்து சென்றனர்.
கீரனூர் கோட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். செல்போனில் பேசிக்கொண்டு வாகனங்கள் ஓட்டக்கூடாது. மது அருந்தி வாகனங்களை ஓட்டக்கூடாது என்பன உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தில் புதுக்கோட்டை கோட்ட பொறியாளர் தமிழழகன், கீரனூர் உதவி கோட்ட பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் இலக்கியா மற்றும் அலுவலர்கள், சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.