மணமேல்குடி ஒன்றியத்தில் மருத்துவ முகாம் விழிப்புணர்வு பேரணி




மணமேல்குடி ஒன்றியத்தில் மருத்துவ முகாம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்தில் மருத்துவ முகாம் விழிப்புணர்வு பேரணியினை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் மதிப்புக்குரிய திரு.செழியன் அவர்களின் தலைமையில் தொடங்கியது. 

வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் அவர்கள் மற்றும் மணமேல்குடி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மருத்துவ முகாம் விழிப்புணர்வு பேரணியானது வருகின்ற வெள்ளிக்கிழமை 31/1/2025 அன்று நடைபெற இருப்பதினால் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இப்பேரணி நடைபெற்றது. 

 இப்பேரணியில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் 0 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள் கலந்து கொள்ளலாம் என்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு தேவையான உதவி உபகரணங்களை பெற்றுக் கொடுப்பதற்காக மருத்துவர்கள் ஆலோசனை பேரில் அடையாள அட்டை பெற்று தரப்படும் என்றும், அதேபோல் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு நல திட்டங்களை கொண்டு சேர்ப்பதற்காகவும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்  குழு வருகை தர இருப்பதினால் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு அன்போடு அழைக்கின்றோம் .
மணமேல்குடி தொடக்கப்பள்ளி மாணவர்கள் இப்பேரணியில் கலந்து கொண்டு வாசகங்களை உச்சரித்து கலந்து கொண்டனர்

 இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர்கள் திரு சசிகுமார் திரு பன்னீர்செல்வன் என் வரை மருத்துவர் திரு செல்வகுமார் மற்றும்  சிறப்பு ஆசிரியர்கள் திருமதி மணிமேகலை  திரு கோவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.











எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments