GPM சொந்தங்கள் சமூக அறக்கட்டளை சார்பாக மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெண்மணிக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது...




புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில்  GPM  சொந்தங்கள் சமூக அறக்கட்டளை அரசு அங்கீகாரம் பெற்று தொடர்ந்து பல்வேறு   உதவிகளை பொதுமக்களுக்கு இந்த அறக்கட்டளை செய்து வருகிறது. மருத்துவ உதவி, திருமண உதவி, கல்வி உதவி, என பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அந்த அடிப்படையில் நமது கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மிகவும் ஏழ்மையான பெண்மணிக்கு சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவ வசதி இல்லாமல் சிரம்மபட்டனர் அந்த வகையில் நமது GPM சொந்தங்கள் சமூக அறக்கட்டளையை நாடினார்கள் . அதன்பிறகு GPM சொந்தங்கள் சமூக அறக்கட்டளை சார்பாக உறுப்பினர்களிடம் வசூல் செய்து ரூபாய் 36000 அந்த பெண்மணிக்கு 8.01.2025 புதன்கிழமை அன்று GPM   சொந்தங்கள் சமூக அறக்கட்டளை அலுவலகத்தில் அந்த பெண்மணிக்கு ஆலோசனை குழு உறுப்பினர்கள் வழங்கினார்கள். இதற்காக பொருளாதார உதவிகள் வழங்கிய அத்தனை பேருக்கும் ஜஸாகல்லாஹூ ஹைரன் . மேலும் உங்களுடைய உதவிகளை பல்வேறு மக்களுக்கு செய்திட GPM மீடியா சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments