ஜெகதாப்பட்டினத்தில் விசைப்படகில் சிக்கிய வலையை எடுக்க முயன்ற மீனவர் கடலில் மூழ்கி பலி




ஜெகதாப்பட்டினத்தில் விசைப்படகில் சிக்கிய வலையை எடுக்க முயன்ற போது கடலில் மூழ்கி மீனவர் பலியானார்.

விசைப்படகுகள்

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் மீன்பிடி இறங்கு தளம் அமைந்துள்ளது. இதில் விசைப்படகுகளில் கடலில் மீன்பிடிக்க மீனவர்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 27 விசைப்படகுகள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று கடலுக்குள் சென்றன. இதில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த குமார் (வயது 46) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சோ்ந்த வெற்றிவேல் (27), குருநாதன், ராமகிருஷ்ணன் (35), ஆரோக்கிய ஆண்டனி (37) ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

மீனவர் பலி

கரையில் இருந்து விசைப்படகு புறப்பட்டு சென்ற 1 நாட்டிக்கல் மைல் தொலைவில், விசைப்படகின் புரப்போலரில் வலை சிக்கியது. இதனால் படகு புறப்பட்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து படகில் இருந்த மீனவர் ஒருவர் முதலில் குதித்து வலையை எடுக்க முயன்றிருக்கிறார். அந்த நேரத்தில் மீனவர் வெற்றிவேல், படகில் இருந்து கடலில் குதித்து, வலையை எடுக்க முயற்சித்தார். ஆனால் வெகுநேரமாகியும் வெற்றிவேல் தண்ணீரின் மேல் பகுதிக்கு வரவில்லை.

இதையடுத்து கடலில் மூழ்கி அவர் பரிதாபமாக இறந்தார். அவரை சக மீனவர்கள் மீட்டு படகில் கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்சில் உடல் மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலில் மூழ்கி மீனவர் பலியானது சக மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments