சமூக ஆர்வலர் கொலை வழக்கு எதிரொலியாக திருமயத்தில் உள்ள கல்குவாரிக்கு அதிகாரிகள் `சீல்' வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சமூக ஆர்வலர் கொலை
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெங்களூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜகபர் அலி (வயது 58). சமூக ஆர்வலரும், அ.தி.மு.க. பிரமுகருமான இவர் திருமயம் அருகே கல்குவாரிகளில் சட்டவிரோதமாக கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுவதாக புகார் தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17-ந் தேதி அவர் மினி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மினி லாரி உரிமையாளர் முருகானந்தம், டிரைவர் காசிநாதன், கல்குவாரி உரிமையாளர் ராசு, அவரது மகன் தினேஷ், மற்றொரு கல் குவாரி உரிமையாளர் ராமையா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜகபர் அலி மனைவி மரியம், தனது கணவர் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து கோர்ட்டு உத்தரவுபடி ஜகபர் அலி உடல் ேதாண்டி எடுக்கப்பட்டு திருமயம் தாசில்தார் ராமசாமி முன்னிலையில், மருத்துவக்குழுவினர் எக்ஸ்ரே எடுத்தனர். எக்ஸ்ரே எடுத்தபின் உடலை மீண்டும் அடக்கம் செய்தனர்.
கல்குவாரி-வீடுகளில் சோதனை
இதையடுத்து நேற்று முன்தினம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மற்றும் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி ஆகியோர் ராமையா மற்றும் ராசு ஆகியோருக்கு சொந்தமான துளையானூர் பகுதிகளில் உள்ள கல்குவாரி, அவர்களது வீடுகள், திருமயத்தில் உள்ள ராசுவின் நகை அடகு கடை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். மேலும் திருமயத்தில் உள்ள லாரி உரிமையாளர் முருகானந்தம் வீடு மற்றும் கடைகளிலும் நீண்ட நேரம் சோதனை நடந்தது.
கல்குவாரிக்கு `சீல்’
இந்நிலையில் கலெக்டரின் உத்தரவின்படி, நேற்று மாலையில் புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. ஐஸ்வர்யா தலைமையில், திருமயம் தாசில்தார் ராமசாமி, திருமயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் திருமயம் அருகே துலையானூரில் உள்ள கல் குவாரிக்கு `சீல்' வைத்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.