ஏம்பக்கோட்டை மதரஸா ரஹுமா பரக்கத் மக்தப் & மகளிர் அரபிக் கல்லூரி ஆண்டு விழா கோபாலபட்டிணத்தை சேர்ந்த ஐந்து மாணவிகள் ஆலிமா பட்டமும் 5 நபர்கள் ஹாபிழா சகீராவும் 4 நபர்கள் காரிஆ சனதும் பெற்றனர்




ஏம்பக்கோட்டை மதரஸா ரஹுமா பரக்கத் மக்தப் & மகளிர் அரபிக் கல்லூரியின்முதலாம் ஆண்டு குர்ஆன் நாழிரா (சான்றிதழ்) இரண்டாம் ஆண்டு ஹாபிழா சகீரா (சான்றிதழ்) மற்றும் முபல்லிகா (ஆலிமா) மூன்றாம் ஆண்டு காரிஆ நான்காம் ஆண்டு முஅல்லமா பட்டமளிப்பு விழா ஐந்தாம் ஆண்டு மதரஸா ஆண்டு விழா  ஹிஜ்ரி 1446 ஷஃபான் பிறை 16, 17 2025 பிப்ரவரி 15, 16 (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது

ஆலிமா  காரிஆஹாபிழா சகீரா சனது பெற்ற  கோபாலபட்டிணத்தைச் சேர்ந்த 14 மாணவிகள் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் தாலுக்கா  மீமிசல் அருகே உள்ள ஏம்பக்கோட்டை கிராமத்தில் உள்ள மதரஸா ரஹுமா பரக்கத்  இஸ்லாமிய மகளிர் அரபிக்கல்லூரியில் கடந்த 15,16, சனி,மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் மதரஸாவின் ஐம்பெரும் விழா நடைபெற்றது

முதல் நாள் காலை மதரஸாவின் ஐந்தாவது ஆண்டுவிழாவும் மக்தப் குர்ஆன் மதரஸா மாணவர்களின் பல்சுவை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது, மதியம் 02.30 மணி முதல் இரவு  09.30 மணி வரை பெண்களுக்கான  பயான்,கருத்தரங்கம்
கிராஅத் போன்ற பல நிகழ்வுகள் நடைபெற்ளது...


அதேபோல் 16 ந்தேதி  ஞாயிறு  காலை 09.00 மணி முதல் 12.30 மணி வரை முதலாம் ஆண்டு குர்ஆன் நாழிரா சான்றிதழ்,இரண்டாம் ஆண்டு ஹாபிழா சகீரா  (குட்டி ஹாபிழா) சான்றிதழ், இரண்டாம் ஆண்டு  முபல்லிகா சனது, மூன்றாம் ஆண்டு  காரிஆ சனது, நான்காம் ஆண்டு முஅல்லமா சனது ஆகிய பட்டமளிப்பு விழா   நிகழ்வு நடைபெற்றது..


அனைத்து ஊர் ஜமாஅத் நிர்வாகிகளின் முன்னிலையில் நம்புதாழை ஸபீலுல் உலூம் அரபிக்கல்லூரியின் முதன்மை பேராசிரியர் மௌலவி,ஹாபிழ், ஸப்ஆ காரி A. முஹம்மது ருஷ்துத்தீன் தாவூதி  அவர்களின் இனிமையான ஸப்ஆ  கிராஅத்துடன்  நிகழ்ச்சி ஆரம்பமானது

இந்நிகழ்வில் ராமநாதபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா பேரவைத் தலைவர்
மௌலவி,ஹாபிழ்,  H. ஜலாலுத்தீன் அன்வாரி ஹஜரத் அவர்கள் சனது வழங்கி
சிறப்புப்பேருரை நிகழ்த்தினார்கள்....

17 மாணவிகள் முபல்லிகா பட்டமும்  11 மாணவிகள் காரிஆ பட்டமும்
11 மாணவிகள் முஅல்லமா பட்டமும்  5 மாணவிகள் குட்டி ஹாபிழா என்ற ஹாபிழா சகீரா சான்றிதழும்  மக்தப் ஆண்கள் பிரிவில்  மூன்று மாணவர்கள் குர்ஆன் நாழிரா சான்றிதழும் பெற்றனர்...

இதில்  வட்டார உலமாக்கள், மாணவிகளுக்கு வாழ்த்துரை வழங்கினர்.

இத்நிகழ்வை மதரஸாவின் முதல்வர் மௌலவி,பாஜில்,காரி, M.J. முகமது மைதீன் தாவூதி அவர்கள்  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்...

இறுதியாக கடற்கறை வட்டார உலமா சபை தலைவர் A.அப்துல்லாஹ் அன்வாரி ஹஜரத் அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது
அல்ஹம்துலில்லாஹ்







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments