புதுக்கோட்டையில் கல்லூரி மாணவர்களுக்கு கல்விக்கடன் முகாம் நாளை நடக்கிறது




புதுக்கோட்டையில் கல்லூரி மாணவர்களுக்கு கல்விக்கடன் முகாம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

கல்விக்கடன் முகாம்

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டா் தலைமையில் கல்லூரி முதல்வர்களுக்கும், வங்கியாளர்களுக்கும் கல்விக்கடன் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ரூ.24 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகமும், மாவட்ட முன்னோடி வங்கியும் பல்வேறு கல்விக்கடன் முகாம்களை நடத்தியுள்ள நிலையில் அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாணவர்களின் உயர்கல்விக்கான கனவை நனவாக்க மாபெரும் கல்விக்கடன் முகாம் நாளை (செவ்வாய்க்கிழமை) மன்னர் கல்லூரி வளாக கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.

கடன் திட்டங்கள்

முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி அலுவலர்களும் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு கல்விக்கடன் பெறுவதற்கான முழுமையான தகவல்களையும், ஆலோசனைகளையும் வழங்கவுள்ளன. மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கடன் விண்ணப்பிப்பதற்கும் பெறுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளும் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் கலந்து கொண்டு கல்விக்கடன் பெற்று பயன்பெறலாம்.

நிகழ்வின் சிறப்பம்சங்கள், பல்வேறு வங்கிகளின் கல்விக்கடன் திட்டங்கள் பற்றி நேரடியாக தெரிந்துகொள்ளலாம். கல்விக்கடன் பெறுவதற்கான தகுதிகள், தேவையான ஆவணங்கள் பற்றிய விளக்கம். வங்கித் தரப்பிலிருந்து நேரடியாக ஆலோசனை பெறும் வாய்ப்பு. கல்விக்கடன் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த தெளிவான விளக்கம் பெறலாம் என மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments