புதுக்கோட்டை மாவட்டத்தில் திருட்டுப்போன 140 செல்போன்கள் மீட்பு உரியவர்களிடம் ஒப்படைப்பு




புதுக்கோட்டை மாவட்டத்தில் திருட்டுப்போன 140 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

செல்போன்கள் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருட்டுப்போன மற்றும் தொலைந்து போன செல்போன்கள் தொடர்பாக பொதுமக்கள் பலர் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக மாவட்டத்தில் அந்தந்த போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக்குப்தா சைபர் கிரைம் போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் தலைமையில் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் திருட்டுப்போன மற்றும் தொலைந்து போன செல்போன்களை தொழில்நுட்ப முறையில் கண்டறிந்து அதனை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.

உரியவர்களிடம் ஒப்படைப்பு

இதில் கடந்த 2 மாதங்களில் 140 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.21 லட்சம் இருக்கும். மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் உரியவர்களிடம் செல்போன்களை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் வழங்கினார். அப்போது சைபர் கிரைம் போலீசார் உடன் இருந்தனர்.

மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் தற்போது வரை மொத்தம் 894 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.1 கோடியே 58 லட்சத்து 60 ஆயிரம் ஆகும் என போலீசார் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments