மணமேல்குடி ஒன்றியத்தில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் அவர்கள் ஆகியோர் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி வட்டார வள மையத்தில் குழந்தைகள் மீதான பாலியில் துன்புறுத்தல்களை தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சியினை புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் மதிப்புக்குரிய திருமதி சசிகலா அவர்கள் தொடங்கி வைத்தார்.
மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் திரு செழியன் அவர்கள் மற்றும் மணமேல்குடி வட்டார வளமையம் மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தார். இப்பயிற்சியில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் புரிந்து கொள்ளுதல், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்கும் சட்டங்கள் குறித்த ஒரு பார்வை,
குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் - வெளிப்படுத்தலை கையாளுதல்,
குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை கையாளுபவர்களுக்கு விழிப்புணர்வுகளை கொடுத்தல் போன்ற தலைப்புகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தில் இருந்து மதிப்புக்குரிய திரு முத்து பிரகாஷ் அவர்கள் சமுதாயத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நோக்குடன் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
இந்நிகழ்வில் கருத்தாளர்களாக பட்டதாரி ஆசிரியர்கள் திருமதி விஜயலட்சுமி
திருமதி ஜெசிந்தா நௌவுலின் , ஆசிரியர் பயிற்றுநர் திரு.பன்னீர்செல்வன் ஆகியோர் செயல்பட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.