மீன்பிடி தடைக்காலம் எதிரொலி: புதுக்கோட்டையில் மீன்கள் விலை கடும் உயர்வு குளத்து, வளர்ப்பு மீன்கள் வருகை அதிகம்




மீன்பிடி தடைக்காலம் எதிரொலியால் புதுக்கோட்டையில் மீன்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குளத்து, வளர்ப்பு மீன் வருகை அதிகரித்துள்ளது.

நாட்டுப்படகு மீனவர்கள்

தமிழகத்தில் கிழக்கு கடற்கரை வங்கக்கடல் பகுதியில் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடி தடைக்காலம் கடந்த 15-ந் தேதி முதல் தொடங்கியது. வருகிற ஜூன் 14-ந் தேதி வரை தடைக்காலம் அமலில் உள்ளது. இதையொட்டி விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அதேநேரத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குள் குறிப்பிட்ட நாட்டில் கல் வரை சென்று மீன்கள் பிடித்து வருகின்றனர். இந்த மீன்கள் கடைகளுக்கு விற்பனைக்கு வருகிறது. புதுக்கோட்டை மீன் மார்க்கெட்டிற்கும் கட்டுமாவடி உள்பட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாட்டுப்படகுகளில் பிடிக்கப்படும் மீன்கள் விற்பனைக்கு வருகிறது. இதில் மீன்கள் அதிகம் பிடிபடாததால் குறைந்த அளவு தான் விற்பனைக்கு வருகிறது.

மீன்கள் விலை உயர்வு

இதேபோல மாவட்டத்தில் உள்ள குளத்து மீன்கள், ஆந்திரா, கேரளாவில் இருந்து வளர்ப்பு மீன்கள் விற்பனைக்கு அதிகம் வரத்தொடங்கியுள்ளன. கடல் மீன்கள் வரத்து குறைவால் மீன்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு மீனும் கிலோவுக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை உயர்ந்துள்ளது. இதேபோல கடல் நண்டு விலையும் உயர்ந்துள்ளது.

புதுக்கோட்டை சந்தைபேட்டை அருகே உள்ள மீன் மார்க்கெட்டில் விற்பனையான மீன்களில் சிலவற்றின் விலை விவரம் கிலோ கணக்கில் வருமாறு:- முரல் மீன் கிலோ ரூ.500-க்கும், நகரை ரூ.450-க்கும், கொடுவா ரூ.700-க்கும், இறால் ரூ.400-க்கும், கிழங்கா ரூ.600-க்கும், விலை மீன் ரூ.450-க்கும், குளத்து விரால் மீன் ரூ.600-க்கும், கெழுத்தி ரூ.400-க்கும், ஆந்திரா வளர்ப்பு கெண்டை மீன் ரூ.160-க்கும், பங்காஸ் ரூ.150-க்கும், வாவல் ரூ.150-க்கும் விற்றது. கடல் நண்டு கிலோ ரூ.700-க்கு விற்பனையானது. விலை உயா்ந்திருந்தாலும் மீன்பிரியர்கள் தங்களுக்கு பிடித்தமான மீன் வகைகளை வாங்கி சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments