ஜமாபந்தி
புதுக்கோட்டை மாவட்டத்தில், உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்களால் பராமரிக்கப்பட்டு வரும் வருவாய் கிராமக்கணக்குகளை ஒவ்வொரு வருடமும் அந்தந்த ஆண்டின் இறுதி மாதத்தில் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று, நடப்பு ஆண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜமாபந்தி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் தொடங்கி கிராமக்கணக்குகள் தணிக்கை செய்யப்படவுள்ளது. இலுப்பூர் தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் அருணா தலைமையில் நாளை மறுநாள் குடுமியான்மலை உள்வட்டத்திற்கும், வருகிற 16-ந் தேதி சித்தன்னவாசல் உள்வட்டத்திற்கும், 20-ந் தேதி வீரப்பட்டி உள்வட்டத்திற்கும், 22-ந் தேதி இலுப்பூர் உள்வட்டத்திற்கும் ஜமாபந்தி நடத்தப்படவுள்ளது.
புதுக்கோட்டை
மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நாளை மறுநாள் கொடும்பாளூர் உள்வட்டத்திற்கும், 16-ந் தேதி நீர்பழனி உள்வட்டத்திற்கும், 20-ந் தேதி விராலிமலை உள்வட்டத்திற்கும் ஜமாபந்தி நடைபெற உள்ளது.
சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலரால் (தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு) புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் நாளை மறுநாள் வாராப்பூர் உள்வட்டத்திற்கும், 16-ந் தேதி புதுக்கோட்டை உள்வட்டத்திற்கும் நடைபெறும். சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் (நிலமெடுப்பு, காவிரி-குண்டாறு -வைகை இணைப்புக் கால்வாய்த் திட்டம்), அறந்தாங்கி தாசில்தார் அலுவலகத்தில் நாளை மறுநாள் அத்தாணி உள்வட்டத்திற்கும், 16-ந் தேதி நாகுடி உள்வட்டத்திற்கும், 20-ந் தேதி பூவத்தக்குடி உள்வட்டத்திற்கும், 22-ந் தேதி அரசர்குளம் உள்வட்டத்திற்கும், 23-ந் தேதி அன்று சிலட்டூர் உள்வட்டத்திற்கும், 27-ந் தேதி அறந்தாங்கி உள்வட்டத்திற்கும் வருவாய்த் தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.
கோரிக்கை மனுக்கள்
இதேபோல திருமயம், ஆலங்குடி, ஆவுடையார்கோவில், குளத்தூர், கந்தர்வகோட்டை, மணமேல்குடி, கறம்பக்குடி, பொன்னமராவதி உள்ளிட்ட தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாட்களில் காலை 10 மணிக்கு அந்தந்த தாசில்தார் அலுவலகத்தில் நடைபெறும். ஜமாபந்தி இறுதி நாளன்று குடிகள் கூட்டம் நடைபெறும். எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களது கோரிக்கை மனுக்களை முதல்வரின் முகவரி இணைய தளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.