மாவட்டத்தில் பிளஸ்-2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வினியோகம்




பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டன. இதைத்தொடர்ந்து உயர்கல்வியில் சேர்வதற்கு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். உயர்கல்வியில் சேர்வதற்கு பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் தேவைப்படும். இதனை பள்ளிக்கல்வி துறை முதலில் தற்காலிகமாக மதிப்பெண் சான்றிதழை வினியோகிக்கும். இதனை அந்தந்த பள்ளியில் இணையதளத்தில் ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து மாணவ-மாணவிகள் பெற்றுக்கொள்ளலாம். அந்த வகையில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் பற்றி துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டையில் நேற்று பள்ளிகளில் பிளஸ்-2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் பணி நடைபெற்றது. தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மாணவ-மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகிக்கப்பட உள்ளதாக கல்வித்துறை வட்டாரத்தில் தொிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments