புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் மேலும் ஒரு நடைபாதை மேம்பாலம் அமைக்க ரூ.5 கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கீடு




புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் மேலும் ஒரு நடைபாதை மேம்பாலம் அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வளர்ச்சி பணிகள்

புதுக்கோட்டை ரெயில் நிலையம் வழியாக 20-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ரெயில் நிலையத்தில் முதலாவது, 2-வது நடைமேடையில் இருந்து ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் 3-வது நடைமேடை, சரக்கு ரெயில்கள் நிறுத்த தனி தண்டவாள பாதை உள்ளது.

ரெயில் நிலையத்தில் அம்ருத் திட்டத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பணிகள் நடைபெற்று வருகிறது. ரெயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையிலிருந்து, 2-வது நடைமேடைக்கு செல்லும் வகையில் நடைபாதை மேம்பாலம் உள்ளது. இந்த நடைபாதை மேம்பாலத்தின் அருகே புதிதாக லிப்ட் வசதி தற்போது அமைக்கப்பட்டுள்ளது.

நடைபாதை மேம்பாலம்

இந்த நிலையில் மத்திய ரெயில்வே பட்ஜெட்டிற்கு பின் ரெயில்வேயில் பல்வேறு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு தொடர்பாக அறிவிக்கப்பட்டு்ளது. அதில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் மேலும் ஒரு நடைபாதை மேம்பாலம் 6 மீட்டர் அகலத்தில் அமைக்க ரூ.5 கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்கால தேவை, பயணிகள் நலன் கருதி இந்த நடைபாதை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல மதுரை கோட்டத்தில் சரக்கு ரெயில் முனையத்திற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியானது புதுக்கோட்டை, திண்டுக்கல், செட்டிநாடு ரெயில் நிலையங்களுக்கு என மொத்தம் ரூ.18 கோடியே 84 லட்சம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த தகவலானது ரெயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments