ஆற்றங்கரை வைகை ஆறும் கடலும் இணையக்கூடிய முகத்துவார பகுதியில் சென்னை சுற்றுலா ஆணையர் மற்றும் டி.டி.டி.சி நிர்வாக இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பார்வை




ஆற்றங்கரை வைகை ஆறும் கடலும் இணையக்கூடிய முகத்துவார பகுதியில் சென்னை சுற்றுலா ஆணையர் மற்றும் டி.டி.டி.சி நிர்வாக இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்கள் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட சுற்றுலா அதிகாரி நித்திய கல்யாணி வருகை தந்து சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள் பற்றி பார்வையிட்டார்கள் 

தமிழக அரசு சமீபத்தில் சுற்றுலா தலமாக மாற்றுவதற்கு நிதியும் ஒதுக்கி உள்ளது

அதனைத் தொடர்ந்து சுற்றுலா சம்பந்தமான கோரிக்கை உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் பொது மக்களின் வாழ்வாதாரம் குறித்து ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் முஹம்மமது அலி ஜின்னா மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நூருல் அஃபான் விரைவாக எடுத்து கூறினார்கள் 

உடன் இராமேஸ்வரம் சுற்றுலா அதிகாரிகள் மற்றும் வருவாய் அதிகாரிகள், ஆற்றங்கரை கிராம அதிகாரி புவனேஸ்வரன் உள்ளிட்ட ஆற்றங்கரை கிராம பொது மக்கள் இருந்தார்கள்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments