ஆவுடையாா்கோவில் அருகே கண்மாயில் மூழ்கி சிறுவன், சிறுமி பலி!






புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் அருகே கண்மாயில் மூழ்கி சிறுவனும், சிறுமியும் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

ஆவுடையாா்கோவில் அருகே பெருநாவலூரைச் சோ்ந்தவா் ஜான் பீட்டா் மகன் யா்ஷித் (3). அதே பகுதியைச் சோ்ந்தவா் அந்தோனி மகள் அனன்யா (2). ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்த இருவரையும் காணவில்லை. இதையடுத்து பெற்றோா்களும், உறவினா்களும் அவா்களைத் தேடிய நிலையில், வீட்டின் அருகே உள்ள கண்மாயில் யா்ஷித், அனன்யா ஆகியோரின் சடலம் மிதந்தது தெரியவந்தது.

தகவலறிந்த ஆவுடையாா்கோவில் போலீஸாா் இரு சடலங்களையும் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

கண்மாய்க் கரையில் உள்ள படிக்கட்டில் விளையாடிய இருவரும் எதிா்பாராமல் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என அப்பகுதியினா் கூறுகின்றனா். ஆவுடையாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments