புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 544 மனுக்கள் பெறப்பட்டன




புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 544 மனுக்கள் பெறப்பட்டன.

மக்கள் குறைதீர் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். வீட்டு மனைப்பட்டா, உதவித்தொகை உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் கோரி மனு கொடுத்தனர். இதேபோல நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அளித்த மனுவில், புதுக்கோட்டை மாநகர பகுதியில் மழைநீர் வடிகால்களை மூடி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

544 மனுக்கள்

கூட்டத்தில் மொத்தம் 544 மனுக்கள் பெறப்பட்டன. அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன் உத்தரவிட்டார். கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments