ஆவுடையாா்கோவிலில் அண்ணன்-தம்பி படுகொலை சம்பவம்: தேசிய ஆதிதிராவிடர் ஆணைய தலைவர் விசாரணை




ஆவுடையார்கோவிலில் அண்ணன்-தம்பி படுகொலை சம்பவம் தொடர்பாக தேசிய ஆதிதிராவிடர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா விசாரணை நடத்தினார்.

இரட்டை கொலை சம்பவம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் கடந்த 24-ந் தேதி அன்று அண்ணன், தம்பியான கண்ணன் மற்றும் கார்த்திக் 2 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக 8 பேர் போலீசில் சரண் அடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக தேசிய ஆதிதிராவிடர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா ஆவுடையார்கோவிலில் நேற்று விசாரணை நடத்தினார். கொலை சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டார். மேலும் கொலையானவர்களின் வீட்டிற்கு சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் அவர்களிடம் குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

கடும் தண்டனை

அண்ணன், தம்பியை கொலை செய்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களை கைது செய்யவும், சட்ட விரோத செயல்களை தட்டிக்கேட்டதால் 2 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளதாவும், கொலையாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க குடும்பத்தினர் வலியுறுத்தினர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா தெரிவித்தார்.

மேலும், இதுபோன்ற நிகழ்வுகள் இனி வரும்காலங்களில் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். ஆணைய தலைவருடன் ஆணைய தனிச் செயலாளர் கவுரங் சாவ்தா, ஆணைய இயக்குனர் ரவிவர்மன், மாவட்ட கலெக்டர் அருணா, போலீஸ் ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி, துணை இயக்குனர் ஸ்டாலின், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக்குப்தா உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments