ஜனவரி 4: கோபாலப்பட்டிணம் தாருல் குர்ஆன் பெண்கள் மதரஸா வரலாற்றுச் சிறப்புமிக்க பட்டமளிப்பு விழா!



கோபாலப்பட்டிணத்தில் செயல்பட்டு வரும் தாருல் குர்ஆன் பெண்கள் மதரஸா (மதரஸா-யே-நிஸ்வான், மண்ணடி – சென்னை இணைப்பு) சார்பில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவும், மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவும் வரும் 04.01.2026 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்த விழா கோபாலப்பட்டிணம் MKR ராசி திருமண மஹாலில், காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை முழுநாள் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது.

முதல் அமர்வு – பெண்களுக்கான நிகழ்ச்சி
விழாவின் முதல் அமர்வு காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறுகிறது. இந்த அமர்வு பெண்களுக்கு மட்டும் என ஒதுக்கப்பட்டு, மாணவிகளின் கல்வி திறன் வெளிப்படுத்தல், மார்க்க உரைகள், குர்ஆன் ஓதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இரண்டாம் அமர்வு – பட்டமளிப்பு விழா & சிறப்பு பயான்
இரண்டாம் அமர்வு மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறுகிறது. இதில் பட்டமளிப்பு விழா மற்றும் சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த அமர்வில் பெண்கள் பங்கேற்க தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழாவின் தலைமை, முன்னிலை மற்றும் முக்கிய பிரமுகர்கள்

இந்த மகத்தான விழாவிற்கு அல்ஹாஜ் SRMI.ஷேக் பரீத் அவர்கள் (அறங்காவலர், சுன்னத்துவல் ஜமாத், கோபாலப்பட்டிணம்) தலைமை தாங்குகிறார்.

முன்னிலை ஹாஜி RSM.முகமது அன்சாரி (தலைவர் மற்றும் நிர்வாகிகள், முஸ்லிம் ஜமாத், கோபாலப்பட்டிணம்) 

அல்ஹாஜ் K.நவாஸ் கனி MP, (நாடாளுமன்ற உறுப்பினர்&தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர்),

ஜனாப்.MM.அப்துல்லாஹ்,Ex.MP (புதுக்கோட்டை),

மௌலவி, அல் ஹாஃபிழ் ஜாபர் அலி (ஏ) சகாபர் உலவி (மாவட்ட செயலாளர், ஜமாத்துல் உலமா சபை),

ஜனாப் மு.தமிமுன் அன்சாரி MA., Ex.MLA (தலைவர், மனிதநேய ஜனநாயக கட்சி),

ஜனாப் MKR.முகமது காசிம் (தொழில் அதிபர், கோபாலப்பட்டிணம்),

ஹாஜி M.பாவா மரைக்காயர் (அறங்காவலர், பைத்துல் மால் & GPM மக்கள் மேடை),

ஜனாப் M.அபூபக்கர் (ரஹ்மான் ஜூவல்லரி, வர்த்தக சங்க தலைவர், மீமிசல்),

ஜனாப் AKM.ஜியாவுதீன் & பிரதர்ஸ் (ASSET College, சென்னை, கோயம்புத்தூர்),

அல் வின்னர் வர்த்தகர் சங்கம், கும்பகோணம்,

உள்ளூர் உலமா சபை, கோபாலப்பட்டிணம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முன்னிலை வகிக்கின்றனர். 

சிறப்பு அழைப்பாளர்கள்

இந்த விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தரும் பெண்கள் மதரஸாக்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர்.

அதில் முக்கியமாக:

ரஹ்மானியா பெண்கள் மதரஸா, முஸ்லிம் ஜமாத் கோபாலப்பட்டிணம்.

தாருல் ஹுதா பெண்கள் மதரஸா, முஸ்லிம் ஜமாத், ஆர்.புதுப்பட்டினம்.

அல்ஹாஜ்.ARN.ஆஷிக் – அல் இஸ்லாஹ் பவுண்டேசன் டிரஸ்ட்.

மதரஸத்துல் ஆயிஷத்துல் நூராணியா, முஸ்லிம் ஜமாத், அரசநகரிபட்டினம்.

அன்னை பாத்திமா தர்பியத்துல் பனாத், பெண்கள் மதரஸா முஸ்லிம் ஜமாத், பொய்யாதநல்லூர்.

அல்ஹாஜ்.NS.அயுப்கான், மதரஸா ரஹூமா பரக்கத் – ஏம்பக்கோட்டை

ஜனாப்.J.முகமது யூசுப், தாளாளர், பாப்புலர் ஸ்கூல் தீனியாத் மக்தப் சென்டர் – மீமிசல்

தர்பியத்துல் பனாத் பெண்கள் மதரஸா, முஸ்லிம் ஜமாத், வெளிவயல்.

மதரஸத்துல் ஹூதா மகளிர் அரபிக்கல்லூரி, முஸ்லிம் ஜமாத், கோலேந்திரம்.

மதரஸத்துல் ஆயிஷத்துர் ரஹூமா, பெண்கள் மதரஸா முஸ்லிம் ஜமாத் முத்துக்குடா.

தாழனூர், பொன்பேத்தி உள்ளிட்ட பல பகுதிகளின் முஸ்லிம் ஜமாத்கள் பங்கேற்கின்றனர்.

நிகழ்ச்சி நிரல்

மௌலானா ஹாஃபிழ் A.ரியாழ் முஹம்மது அல்குத்ஸி (கோபாலப்பட்டிணம்) அவர்களின் கிராஅத்துடன் விழா இனிதே தொடங்குகிறது.

மௌலவி A.அப்துல்லாஹ் அன்வாரி ஹஜ்ரத் (தலைவர், கடற்கரை வட்டார ஜமாத்துல் உலமா சபை) வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

ஜனாப் KNN.லியாகத்அலி (கௌரவ தலைவர், ஐக்கிய ஜமாத், அறந்தாங்கி வட்டாரம்), ஜனாப் OSM.முகமது அலி ஜின்னா (முன்னாள் ஜமாத் தலைவர், கோபாலப்பட்டிணம்) வாழ்த்துரை உள்ளிட்டோர் வழங்குகின்றனர்.

சிறப்பு பயான் & ஸனது வழங்குதல்

விழாவின் முக்கிய அம்சமாக மௌலானா மௌலவி ஹாஃபிழ் காரி M.ஆஷிக் இலாஹி காஷிஃபி காஸிமி (தலைமை இமாம் & முதல்வர், மதரஸா மன்பவுல் உலூம், முஹம்மது பந்தர்) சிறப்பு பயான் வழங்கி, முதலாம் ஆண்டு கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவிகளுக்கு ஸனது (பட்டம்) வழங்குகிறார்.

நிகழ்ச்சியின் நிறைவில் மௌலானா S. ஜாபர் சாதிக் முனீரி ஹஜ்ரத் (மூஆவீன், கடற்கரை வட்டார தீனியாத் மக்தப் சென்டர்)
நன்றியுரை வழங்குகிறார்.

பட்டம் பெறும் இல்லத்தரசிகள் (துணைவியார்கள்):
ஹாஜி AKM.நஜீப் பாட்ஷா, OSA.இலியாஸ், A.சித்திக் அலி, N.ஹபீப் ரஹ்மான், M.ஜபருல்லா, M.ஜவஹர் அலி, A.கலீல் ரஹ்மான், A.அப்துல் காதர், N.ஷாஜி, ஹாஜி KMS.சாகுல் ஹமீது, M.அன்வர் பாஷா, S.ஒய்சுல் கருணை, S.சிராஜுதின், N.முகம்மது அலி, J. செய்யது அப்தாஹிர், S.செய்யது அப்தாஹிர், A.முகம்மது உசைன், H.பசீர் அகமது, N.முகம்மது சபியுல்லா, S.பசீர் ரஹ்மான், H.அகமது தம்பி, K.முபாரக் அலி, A.முகமது அப்துல்லா, N.செய்யது முஹம்மது, K.முஹம்மது பாதுஷா, I.அப்துல் காதர் மற்றும் A.நபில் ராஜா ஆகியோரின் துணைவியார்கள்.

பட்டம் பெறும் மாணவிகள் (மகள்கள்):
ஜனாப் S.செய்யது முஹமது, A.அஜ்மீர் கான், K.ஜபருல்லாஹ் கான், N.முகம்மது அலி, A.அமீர் சுல்தான், M.செய்யது இப்ராஹிம், I.சித்திக், A.ஜகுபர் அலி, S.சையத் இப்ராஹிம், J.பக்ரூதின் அலி அகமது, A.பரக்கத் அலி மற்றும் J.முகைதீன் பக்கீர் ஆகியோரின் புதல்விகள்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில் கோபாலப்பட்டிணத்தைச் சேர்ந்த சுமார் 39-க்கும் மேற்பட்ட இல்லத்தரசிகள் மற்றும் இளம் மாணவிகள் மார்க்கக் கல்வியை நிறைவு செய்து தங்களது பட்டங்களைப் பெறுகின்றனர்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தாருல் குர்ஆன் பெண்கள் மதரஸா மற்றும் அல்-அன்சார் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.

மேலதிக தகவல்களுக்கு: 98889 97766, 22232



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments