கோபாலபட்டிணம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திய தெரு நாய்கள் பிடிப்பு: பொதுமக்கள் நிம்மதி!





புதுக்கோட்டை மாவட்டம் கோபாலபட்டிணம் பகுதிகளில் நீண்ட நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த தெரு நாய்களை, உள்ளாட்சி நிர்வாகத்தினர் அதிரடியாகப் பிடித்துச் சென்றனர்.

நாய்கள் அட்டகாசம்
கோபாலபட்டிணம் பிரதான சாலை மற்றும் பள்ளி வீதிகளில் சமீபகாலமாக தெரு நாய்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்தது. குறிப்பாக இரவு நேரங்களில் வேலை முடிந்து திரும்புபவர்களையும், அதிகாலையில் பள்ளிக்குச் செல்லும் சிறுவர்களையும் நாய்கள் துரத்திக் கடிப்பதாகத் தொடர் புகார்கள் எழுந்தன. மேலும், சாலையில் நாய்கள் குறுக்கே பாய்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறின.

அதிரடி நடவடிக்கை
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, நேற்று (ஜன.13) காலை சிறப்புப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஊரின் முக்கிய சந்திப்புகள் மற்றும் தெருக்களில் சுற்றித்திரிந்த நாய்களை வலைகள் மூலம் லாவகமாகப் பிடித்தனர்.

ஊராட்சி நிர்வாகத்தின் இந்த உடனடி நடவடிக்கைக்கு கோபாலப்பட்டினம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments