மணமேல்குடியில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான 'எண்ணும் எழுத்தும்' மூன்றாம் பருவப் பயிற்சி தொடக்கம்



புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான மூன்றாம் பருவ ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சி முகாம் வட்டார வளமையத்தில் நடைபெற்றது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இப்பயிற்சிக்கு, வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) திருமதி சிவயோகம் தலைமை தாங்கி முறைப்படி தொடங்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுநர்கள் திரு. பன்னீர்செல்வம் மற்றும் திரு. சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இப்பயிற்சியில், எண்ணும் எழுத்தும் திட்டம் கடந்து வந்த பாதை குறித்தும், மூன்றாம் பருவத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் செயல்பாடுகள் மற்றும் புதிய கற்பித்தல் முறைகள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது. குறிப்பாக, ஒவ்வொரு மாணவருக்குமான மதிப்பீட்டு முறைகள், வகுப்பறையில் மாணவர்கள் சுயமாக செயல்பாடுகளைச் செய்து பார்க்கும் ‘தானே கற்றல்’ முறை மற்றும் இத்திட்டத்தினால் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் மாற்றங்கள் குறித்து ஆசிரியர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர் திரு. சசிகுமார் மற்றும் கருத்தாளர்கள் திரு. முத்துக்குமார், திருமதி ஜோதி, திருமதி சரஸ்வதி, திருமதி அஸ்மா ஆகியோர் கலந்துகொண்டு ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தனர். இதில் மணமேல்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments