புதுக்கோட்டையில் (ஜன-4) போக்குவரத்து மாற்றம்: ஒன்றிய உள்துறை அமைச்சர் வருகையையொட்டி காவல்துறை அறிவிப்பு!



மத்திய உள்துறை அமைச்சர் வரும் ஜனவரி 4-ஆம் தேதி (04.01.2026) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தருகிறார். இதையொட்டி, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சீரான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில், புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி அன்றைய தினம் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முக்கிய நேரக் கட்டுப்பாடுகள்:
காலை 10:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை: திருக்கோகர்ணம் காவல் நிலையம் முதல் கருவேப்பிலான் ரயில்வே கேட் வரை எவ்வித வாகனங்களும் செல்ல அனுமதியில்லை.

மதியம் 01:00 மணி முதல் இரவு 07:00 மணி வரை: கருவேப்பிலான் ரயில்வே கேட் முதல் மாத்தூர் ரவுண்டானா வரை (திருச்சி சாலை) அனைத்து வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாற்றுப் பாதைகள் விவரம்:

1.திருச்சி - புதுக்கோட்டை பேருந்துகள் (இரு மார்க்கமும்)
திருச்சியிலிருந்து வரும் மற்றும் புதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்லும் பயணிகள் பேருந்துகள் பஞ்சப்பூர், விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல், கட்டியாவயல் மற்றும் திருவப்பூர் ரயில்வே கேட் வழியாகச் செல்ல வேண்டும்.

2. திருச்சி - கீரனூர் செல்லும் வாகனங்கள்
பஞ்சப்பூர், பரணி ஹோட்டல் சந்திப்பு, சூரியூர் 4-ரோடு, சின்ன சூரியூர், பெரிய சூரியூர் மற்றும் கிள்ளுக்கோட்டை சாலை வழியாகக் கீரனூர் செல்ல வேண்டும்.

3. கீரனூர் - புதுக்கோட்டை வாகனங்கள்
கீரனூர், குன்னாண்டார்கோவில் 4-ரோடு, ஆண்டகுளம், புத்தாம்பூர், செம்பாட்டூர், தர்கா மற்றும் மச்சுவாடி வழியாகச் செல்ல வேண்டும்.

4. தஞ்சாவூர் - புதுக்கோட்டை வாகனங்கள்
முள்ளூர், மருத்துவக் கல்லூரி, ஆண்டகுளம் விலக்கு மற்றும் மச்சுவாடி வழியாகச் செல்ல வேண்டும்.

வாகன நிறுத்துமிடம் (Parking) வசதிகள்
விழாவிற்கு வரக்கூடிய வாகனங்கள் அவற்றின் வழித்தடத்தைப் பொறுத்து ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் நிறுத்தப்பட வேண்டும்.

திருச்சி சாலை
பஞ்சப்பூர், விராலிமலை வழியாக வருவோர் திருவப்பூர் ரயில்வே கேட் அருகிலுள்ள பார்க்கிங் பகுதிக்குச் செல்ல வேண்டும்.

தஞ்சை சாலை
முள்ளூர், மருத்துவக் கல்லூரி வழியாக வருவோர் மியூசியம் வழியாக ஒதுக்கப்பட்ட பார்க்கிங் பகுதிக்குச் செல்ல வேண்டும்.

ஆலங்குடி/அறந்தாங்கி/திருமயம் மேட்டுப்பட்டி, TVS கார்னர், மியூசியம் வழியாக ஒதுக்கப்பட்ட பார்க்கிங் பகுதிகளுக்குச் செல்ல வேண்டும்.

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த மாற்றங்களுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்டக் காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments