மீமிசலில் ரஹ்மத் கிளினிக் சார்பில் நாளை (ஜன. 4) இலவச எலும்பு திறனாய்வு மருத்துவ முகாம்



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் உள்ள ரஹ்மத் கிளினிக் சார்பில், பொதுமக்களின் நலன் கருதி எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நாளை நடைபெற உள்ளது.

முகாம் விவரங்கள்
மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் (ECR), ஜேம்ஸ் & கோ எதிரில் அமைந்துள்ள ரஹ்மத் கிளினிக் வளாகத்தில் நாளை 04.01.2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 வரை இந்த முகாம் நடைபெறுகிறது.

சிறப்பு மருத்துவர்
இந்த முகாமில் எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் Dr. வெங்கடேஷ் M.B.B.S., M.S. (Ortho), கலந்து கொண்டு நோயாளிகளுக்குப் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகளை வழங்குகிறார்.

வழங்கப்படும் இலவச சேவைகள்
முகாமில் பங்கேற்கும் பொதுமக்களுக்குக் கீழ்வரும் பரிசோதனைகள் முற்றிலும் இலவசமாகச் செய்யப்படும்.
மருத்துவரின் சிறப்பு ஆலோசனை.
உயர் இரத்த அழுத்தப் பரிசோதனை (BP).
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுப் பரிசோதனை (Sugar).
எலும்புத் திறனாய்வுப் பரிசோதனை (Bone Density Test).

யாரெல்லாம் பங்கேற்கலாம்?
மூட்டு வலி, இடுப்பு வலி, முதுகு வலி, கழுத்து வலி, குதிகால் வலி, முடக்கு வாதம், தோள்பட்டை வலி மற்றும் ஆறாத புண் காயங்கள், எலும்பு முறிவு ஏற்பட்டு குணமாகாதவர்கள் என எலும்பு சம்பந்தப்பட்ட அனைத்துப் பாதிப்புகளுக்கும் இந்த முகாமில் தீர்வு காணலாம்.

முன்பதிவு மற்றும் தொடர்புக்கு
இந்த அரிய வாய்ப்பைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முகாம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு மற்றும் முன்பதிவு செய்ய 9092 614 621, 9790 243 182 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments