போலி செயலியை அனுப்பி அரசு பள்ளி ஆசிரியையிடம் ரூ.10 லட்சம் மோசடி




புதுச்சேரி மாநிலம் மடுகரை பகுதியை சேர்ந்தவர் புனிதா (வயது 37). இவர் மடுகரை அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் போலியான செயலி ஒன்று வந்தது.அதனை அவர் கிளிக் செய்துள்ளார். உடனே அவரது வாட்ஸ்அப் மோசடி கும்பலால் ஹேக் செய்யப்பட்டது. பின்னர் அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் அனைத்தும் மற்றொரு எண்ணுக்கு சென்றது. இதற்கிடையே அவரது வங்கி கணக்கில் இருந்து 3 தவணைகளாக ரூ.10 லட்சத்து 200 மோசடி செய்யப்பட்டது. இதற்கான குறுந்தகவல் அவரது செல்போன் எண்ணுக்கு வந்தது. இதேபோல் புதுச்சேரி மீனாட்சி பேட்டையை சேர்ந்த பெண்ணிடம் பகுதி நேர வேலை மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் எனக்கூறி ரூ.2 லட்சத்து 50 ஆயிரமும், கண்டமங்கலத்தை சேர்ந்தவரிடம் ரூ.62 ஆயிரமும், சாரத்தை சேர்ந்த பெண்ணிடம் ரூ.15 ஆயிரமும், முத்தியால்பேட்டையை சேர்ந்த பெண்ணிடம் ரூ.5 ஆயிரமும் மோசடி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 5 பேரிடம் ரூ.13 லட்சத்து 32 ஆயிரத்து 200 மோசடி செய்யப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments