விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் பெற சிறப்பு முகாம் நாளை நடக்கிறது என்று வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சங்கரலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேளாண் அடுக்கு திட்டம்
விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு மானிய திட்டங்களை பெறுவதற்கு தங்களது நில உடைமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொருமுறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதில் ஏற்படும் காலதாமதத்தினை தவிர்க்கும் வகையிலும் அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற ஏதுவாகவும் அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரித்திட தமிழ்நாட்டில் வேளாண் அடுக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த திட்டத்தின்கீழ் 1,26,871 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். மேலும், அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் பதிவு செய்திட அனைத்து கிராமங்களிலும் பதிவுகள் மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, விவசாயிகள் தங்களது ஆதார் எண், செல்போன் எண், நில உடைமை விவரங்கள் ஆகியவற்றை இணைத்திட தங்கள் பகுதி வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அலுவலகங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் விவசாயிகள் அடையாள எண் பெற சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
நில உடைமைகள்
விவசாயிகளின் நில உடைமை விவரங்கள் இணைக்கப்பட்ட பின்னர் அனைத்து விவரங்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஆதார் எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் ஒவ்வொரு விவசாயிக்கும் வழங்கப்படும். மேலும், பிரதம மந்திரி கவுரவ நிதித் திட்டத்தில் தொடர்ந்து தவணைத் தொகைகளை பெறுவதற்கு விவசாயிகளின் நில உடைமைகளை பதிவு செய்து அடையாள எண் பெறுவது கட்டாயம் ஆகும்.
எனவே, விவசாயிகள் தங்களது பகுதி வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்கள் அல்லது அருகில் உள்ள பொது சேவை மையங்களை நேரடியாக அணுகி தங்கள் நில உடைமை விவரங்கள், ஆதார், செல்போன் எண் ஆகிய விவரங்களை அளித்து எந்த வித கட்டணமின்றி விரைந்து பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.