அம்மாபட்டினம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை சூறையாடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊராட்சி அலுவலகம்
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மாபட்டினம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் அம்மா பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலகத்தில் ஊராட்சி செயலாளராக மகேஸ்வரி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மகேஸ்வரி தனது ஊராட்சி பணிகளை முடித்துவிட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.
சூறையாடல்
இந்நிலையில் ஊராட்சி மன்ற அலுவலக கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் அங்கிருந்த கம்ப்யூட்டர், பிரிண்டரை உடைத்தும், பதிவேடுகளை கிழித்தும் அலுவலகத்தை சூறையாடி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்த மகேஸ்வரி ஊராட்சி மன்ற அலுவலகம் சூறையாட பட்டிருப்பதை பார்த்து அதிச்சியடைந்தார். இதையடுத்து அவர் இதுகுறித்து மணமேல்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து ஊராட்சி செயலாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.