புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட மீமிசல் பகுதியில் ஐக்கிய வர்த்தக சங்கத்தின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வர்த்தகர்களின் நலன் மற்றும் சங்க நிர்வாகம் குறித்து ஆலோசிக்கப்பட்டு பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் விதமாக, இனி வரும் காலங்களில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை பொதுக்குழு கூட்டத்தைக் கட்டாயம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. இதன் மூலம் வர்த்தகர்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டறிய வழிவகை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
சங்கத்தின் நிதி நிலை மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக, உறுப்பினர்கள் அனைவரும் தங்களது மாதாந்திர சந்தா தொகையைச் சரியாக ஒவ்வொரு மாதமும் 30-ஆம் தேதிக்குள் செலுத்திவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், சங்கத்தை விரிவுபடுத்தும் நோக்கில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து விவாதிக்கப்பட்டது. மீமிசல் பகுதியில் உள்ள புதிய வணிகர்கள் சங்கத்தில் இணைய விரும்பினால், சங்கத்தின் தலைவர், செயலாளர் அல்லது பொருளாளர் ஆகியோரைத் தொடர்பு கொண்டு தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் மீமிசல் பகுதி வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.