புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், கோட்டைப்பட்டினம் பஞ்சாயத்து கமிட்டி சார்பில் SDPI கட்சியின் மக்கள் தொடர்பு அலுவலகத் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று (பிப். 06) கோட்டைப்பட்டினத்தில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு SDPI கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் MA., அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, புதிய மக்கள் தொடர்பு அலுவலகத்தைத் திறந்து வைத்தார். பின்னர் விழாவில் எழுச்சியுரையாற்றிய அவர், கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். அதனைத் தொடர்ந்து, ஏழை எளிய மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாநிலப் பொதுச் செயலாளர் A.அபுபக்கர் சித்திக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியதுடன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மணமேல்குடி ஒன்றியச் செயலாளர் செல்லாத்தா முகமது மைதின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஒன்றியத் தலைவர் முகமது இப்ராஹிம் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் சேக் இஸ்மாயில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
மேலும், தஞ்சை மண்டலத் தலைவர் A.தப்ரே ஆலம் பாதுஷா, புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத் தலைவர் U.செய்யது அகமது, மாவட்ட பொதுச் செயலாளர் M.முகமது அஜீஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு உரையாற்றினர். மாவட்ட, ஒன்றிய மற்றும் கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில், திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். விழாவின் நிறைவாக, கோட்டைப்பட்டினம் கிராம பஞ்சாயத்து துணைத் தலைவர் முகமது சாலிகு நன்றியுரை ஆற்றினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia


0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.