தொழிற்பழகுனர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் 9-ந் தேதி நடக்கிறது




புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் தொழில் பயிற்சி நிலையத்தில் படித்து, அகில இந்திய தொழிற்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்காக வருகின்ற 9-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை தொழிற்பழகுனர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அரசு மற்றும் தனியார் துறையைச் சார்ந்த பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தொழிற் பழகுனர்களை தேர்வு செய்ய உள்ளனர். மேலும் 10, 12-ம் வகுப்பு, பட்டைய மற்றும் பட்டப்படிப்பு முடித்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தொழிற்பழகுனராக சேர்ந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள உள்ள மாணவ-மாணவியர்கள் தங்களது அசல் கல்விச் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். தொழிற் பழகுனராக தேர்வு செய்யப்படும் மாணவ- மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.16 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்கப்படும். தொழிற் பழகுனர் பயிற்சியின் முடிவில் மத்திய அரசால் சான்றிதழும் வழங்கப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments