புதுக்கோட்டை மாவட்டத்தில் ராணுவத்தில் அக்னிவீர் பணிக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அக்னிவீர் பணிக்கு
இந்திய ராணுவம் அக்னிவீர் (பொதுப்பணி), அக்னிவீர் (டெக்னிக்கல்), அக்னிவீர் (கிளர்க், எஸ்.கே.டி), அக்னிவீர் (டிரேஸ்மேன்) உள்ளிட்ட பணியிடங்களுக்கு வருகிற 2027-ம் ஆண்டுக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. 17½ வயது முதல் 22 வயது வரை உள்ள திருமணமாகாத ஆண்கள் www.joinindianarmy.nic.in என்ற வலைதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு தேர்ச்சி, 12-ம் வகுப்பு தேர்ச்சி, என்.ஐ.ஓ.எஸ்., ஐ.டி.டி. தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். தற்போது தேர்வு எழுதுபவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கலாம்
ஆன்லைன் மூலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைன் தேர்வு வருகிற ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடைபெறும்.
எனவே, இந்திய ராணுவத்தில் சேவை புரிய தகுதியும், விருப்பமுடைய புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் மேற்காணும் இணையதள முகவரியில் பதிவு செய்து பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு திருச்சி ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.