அறந்தாங்கி பஸ் நிலையத்தில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம், கோலப்போட்டி நடைபெற்றது. ஊர்வலத்தை அறந்தாங்கி தேர்தல் அதிகாரியும், வருவாய் கோட்டாட்சியருமான அபிநயா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊா்வலம் அறந்தாங்கி பஸ் நிலையத்தில் தொடங்கி பெரிய கடைவீதி, காந்தி பூங்கா சாலை, காமராஜர் சிலை வழியாக அறந்தாங்கி தாலுகா அலுவலகத்தில் நிறைவு பெற்றது. ஊர்வலத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், தாசில்தாருமான கவியரசு, தேர்தல் துணை தாசில்தார் சக்கர பாண்டியன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்குச்சாவடி மேற்பார்வை அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய்த்துறையினர், நகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.