அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.5.36 கோடியில் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை மைய கட்டிடம் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்



தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, புதுக்கோட்டை மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ரூ.5.36 கோடி செலவில் புதிய டெலிகோபால்ட் சிகிச்சை கருவியுடன் கூடிய புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை மையக் கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அருணா முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ரகுபதி, மெய்யநாதன், அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ரூ.5.36 கோடி செலவில், 5,000 சதுரடி பரப்பளவில் தரை மற்றும் ஒரு தளத்துடன், புதிய டெலிகோபால்ட் சிகிச்சை கருவியுடன் கூடிய புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை மையக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், கதிர்வீச்சு வார்டில் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை கழுத்துப் புற்றுநோய் மற்றும் வாய்குழி புற்றுநோய் ஆகிய நோயாளிகள் அதிகமாக சிகிச்சை பெறுவர். இந்த புதிய சிகிச்சை மையக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டதன் மூலம், புதுக்கோட்டை மாவட்ட மக்களுடன் சேர்த்து அருகிலுள்ள காரைக்குடி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்கள் பயன் பெறுவார்கள், என்றார். இதில் மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், முன்னாள் அரசு வக்கீல் செல்லபாண்டியன், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் கலைவாணி, மருத்துவ பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments