புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் GPM சொந்தங்கள் சமூக அறக்கட்டளை சார்பாக, ஆண்டுதோறும் ரமலான் மாதம் 27-வது இரவில் ஸஹர் உணவு வழங்கும் சேவை சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், இன்ஷா அல்லாஹ் ரமலான் 27-வது இரவு ஸஹர் உணவு ஏற்பாடுகள் நமது ஊர் பெரிய பள்ளிவாசலில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளன.
சிங்கப்பூர் வாழ் இளைஞர்கள் பங்களிப்பு
இந்த ஆண்டிற்கான ஸஹர் உணவுக்கான முழுப் பொருளாதார உதவிகளையும், ஜிபிஎம் சிங்கப்பூர் வாழ் மண்ணின் மைந்தர்கள் மற்றும் சில ஆர்வமுள்ள இளைஞர்கள் இணைந்து வழங்கியுள்ளனர். அவர்களின் இந்த நற்பணி ஊர் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த ஸஹர் உணவானது அதிகாலை 1:00 மணி முதல் 3:00 மணி வரை நடைபெறும். இந்தச் சிறப்பு ஏற்பாடு ஆண்களுக்கு மட்டும் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸஹர் உணவு நிகழ்வில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு ஜிபிஎம் சொந்தங்கள் சமூக அறக்கட்டளை மற்றும் சிங்கப்பூர் வாழ் கோபாலப்பட்டிணம் இளைஞர்கள் சார்பில் அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.