கோபாலப்பட்டிணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி வாழ் பொதுமக்களின் கவனத்திற்கு,
இந்த ஆண்டு (2026) புனித ரமலான் மாத முடிவில் கொண்டாடப்படவுள்ள நோன்புப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்) சிறப்புத் தொழுகை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கோபாலப்பட்டிணம் கடற்கரை பள்ளிவாசல் எதிரே அமைந்துள்ள ஈத்கா மைதானத்தில் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த வருடம் சில தவிர்க்க முடியாத காரணங்களினால், ஈத்கா மைதானத்தில் பெருநாள் தொழுகை நடைபெறாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
கோபாலப்பட்டிணம் சுன்னத்வல் ஜமாஅத் சார்பில் நாளை (21.03.2026) சனிக்கிழமை பெருநாள் தொழுகை: இடங்கள் மற்றும் நேர விபரங்கள் அறிவிப்பு!
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் சுன்னத்வல் ஜமாஅத் அறக்கட்டளை சார்பில், நாளை (21.03.2026) சனிக்கிழமை ஈகைத் திருநாள் பெருநாள் தொழுகை நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் தொழுகை நடைபெறும் இடங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜமாஅத் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாகத் தொழுகை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் விபரங்கள் பின்வருமாறு,
பெண்களுக்கான தொழுகை இடங்கள் (காலை 7:00 மணி)
பெண்களுக்குத் தனித்தனியாக நான்கு இடங்களில் காலை 7:00 மணிக்குத் தொழுகை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது:
- அவுலியா நகர் பள்ளிவாசல்
- கடற்கரை பள்ளிவாசல்
- ரஹ்மானியா நூருல் அய்ன் பெண்கள் மதரஸா
- காட்டுக்குளம் பள்ளிவாசல்
ஆண்களுக்கான தொழுகை இடம் (காலை 8:00 மணி)
ஆண்களுக்கான பெருநாள் தொழுகை கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசலில் காலை 8.00 மணிக்கு நடைபெறும்.
நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு
பெருநாள் தொழுகையானது அறிவிக்கப்பட்டுள்ள நேரங்களில் எவ்விதத் தாமதமுமின்றிச் சரியாகத் தொடங்கும் என ஜமாஅத் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, ஊர் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் குறித்த நேரத்திற்கு வருகை தந்து தொழுகையில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பெருநாள் ஹதீஸ்
"மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள்." (ஆதாரம்: புகாரி 1503, 150
பெருநாள் ஹதீஸ் :
மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1503, 1509
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia


0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.