கோட்டைப்பட்டினம் கிராமத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஓவியம்




அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டினம் கிராமத்தில் மீனவர்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக சிப்பி, மீன், நண்டு, சங்கு, இறால் மற்றும் உப்பு ஆகியவற்றை ஓவியமாக வரைந்து மீனவ மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர் அபிநயா, மணமேல்குடி வாக்காளர் பதிவு அலுவலர் மார்ட்டின் லூதர் கிங், தேர்தல் துணை தாசில்தார் மதியழகன், வருவாய் ஆய்வாளர் பிரவீன், கிராம நிர்வாக அலுவலர் காளிமுத்து, கிராம உதவியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஓவியம் வரைந்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments