அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தேர்தல் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அறந்தாங்கி தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான அபிநயா தலைமை தாங்கினார். போட்டியில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் சார்பில் 8 அணிகள் கலந்து கொண்டன. இதில் வெற்றி பெற்று முதல் 2 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசு கோப்பை, பதக்கம் வழங்கப்பட்டது. இதில் தாசில்தார்கள் கவியரசு (அறந்தாங்கி), சிவகுமார் (ஆவுடையார்கோவில்), மார்டின் லூதர் கிங் (மணமேல்குடி), ஆவுடையார்கோவில் தனி தாசில்தார் சுரேஷ் மற்றும் ஆவுடையார்கோவில் தேர்தல் துணை தாசில்தார் பாலமுருகன், அறந்தாங்கி தேர்தல் துணை தாசில்தார் சக்கர பாண்டியன், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி தாலுகாவைச் சார்ந்த வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.