கோபாலப்பட்டிணம் சுன்னத்வல் ஜமாஅத் உணவுக் கூடம்: நாளை கட்டுமானப் பணிகள் துவக்கம்!



கோபாலப்பட்டிணத்தில் ஜமாஅத் பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிய உணவுக் கூடம் (Dining Hall) அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நாளை தொடங்க உள்ளன.

இது குறித்து கோபாலப்பட்டிணம் சுன்னத்வல் ஜமாஅத் அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

இன்ஷா அல்லாஹ், ஜும்மா தொழுகைக்கு பிறகு நமது ஊரில் அமைய இருக்கும் கோபாலப்பட்டினம் சுன்னத்வல் ஜமாஅத் உணவுக்கூடம் கட்டுமானப் பணிகளின் துவக்க நிகழ்வு நமது ஊர் ஜமாஅத் பொதுமக்கள் முன்னிலையில் ஏக இறைவனின் உதவியோடு நடைபெற இருப்பதால் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு துவா செய்யுமாறும் சிறப்பித்துத் தருமாரும் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளனர்..

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments