நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த விசைப்படகுகளை விரட்டியடித்ததுடன், ஒரு படகை சிறைபிடித்து அதில் இருந்த 2 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
விரட்டியடிப்பு
ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்னர்.
இந்த மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்தபோது அங்கு ரோந்து கப்பலில் இலங்கை கடற்படையினர் வந்தனர். பின்னர் அவர்கள், ராமேசுவரம் மீன்பிடி படகுகளை அத்துமீறி விரட்டியடித்தனர்.
2 மீனவர்கள் கைது
ராமேசுவரத்தை சேர்ந்த வரபிரசாதம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகை சிறைபிடித்து, அந்த படகில் இருந்த கான்ஸ்டன்(வயது 36), மினிட்டோ ராயப்பன்(40) ஆகிய 2 மீனவர்களை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு மன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதேபோல் மீனவர்கள் 2 பேரையும் அங்கு அழைத்துச்சென்று தீவிர விசாரணை நடத்தினர். அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2 மீனவர்களின் குடும்பத்தினரும், மீனவ அமைப்புகளின் நிர்வாகிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.