புதுக்கோட்டை மாவட்டம், கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட ரமலான் மாத கேள்வி-பதில் போட்டியின் வெற்றியாளர்களுக்குப் பரிசளிக்கும் விழா வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
இது குறித்து அறக்கட்டளை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நமது அறக்கட்டளையின் சார்பில் கடந்த ரமலான் மாதம் நடத்தப்பட்ட வினாடி-வினா போட்டியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பான முறையில் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான விழா நாளை 29-03-2026 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3:00 மணி அளவில், கோபாலப்பட்டிணம் MKR ராசி திருமண மஹாலில் நடைபெறுகிறது. இவ்விழாவில் நாச்சியார்கோவில் உமர் (ரலி) பள்ளிவாசல் குர்ஆன் சுன்னாஹ் பேச்சாளர் சகோதரர் ஒலி முஹம்மது அவர்கள் கலந்து கொண்டு மார்க்க சொற்பொழிவாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வு நடைபெறும்.
இந்த விழாவில் பெண்களுக்குத் தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் போட்டியாளர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலதிக விபரங்களுக்கு 7418964895, 9344794989 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.