கோபாலப்பட்டிணம் ரஹ்மானியா பெண்கள் மதரஸாவில் மாணவியர் சேர்க்கை மற்றும் புதிய வகுப்பு தொடக்கம்!



புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் ரஹ்மானியா பெண்கள் மதரஸாவில் 2026-ஆம் ஆண்டிற்கான மாணவியர் சேர்க்கை (Admission) தற்போது நடைபெற்று வருகின்றது.

சிறப்பு அம்சங்கள்
அல்லாஹ்வின் பெரும் கிருபையால், நமது மதரஸாவில் ஆலிமா, காரியா மற்றும் ஹாஃபிழா வகுப்புகள் அனுபவம் வாய்ந்த உஸ்தாத்மார்களைக் கொண்டு மிகச் சிறந்த முறையில் நடத்தப்பட்டு வருகின்றன.

பெண்களுக்கான புதிய 'நாஸிஹா' வகுப்பு
இந்த ஆண்டு (2026) முதல், குடும்பப் பெண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மூன்று வருட பாடத்திட்ட தேர்வு இல்லாத நாஸிஹா வகுப்பு புதிதாகத் தொடங்கப்பட உள்ளது. அனைத்து வயது பெண்களும் மார்க்க அறிவைப் பெற்று பயன் பெறும் வகையில் இந்த வகுப்பு இரண்டு இடங்களில் நடைபெற நிர்வாகம் முடிவு செய்துள்ளது:
 *ரஹ்மானியா பெண்கள் மதரஸா
 *அவுலியா நகர்

சேர்க்கை விபரம்
இந்த புதிய வகுப்பில் அனைத்து வயது பெண்களும் சேர்ந்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

இதற்கான மாணவியர் சேர்க்கை நாளை 29/03/2026 (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்கும் என்பதை நிர்வாகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலதிக தகவல்களுக்கு தொடர்புகொள்ள
பரக்கத் நிஷா ஆலிமா: 75300 41252
ஜான்ஸ் ஆலிமா (அவுலியா நகர்): 68846 68287

இந்த நல்வாய்ப்பினை இப்பகுதி பெண்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மதரஸா நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments