தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி பட்டியல் வெளியீடு: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 109 வேட்பாளர்கள் போட்டி




புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 109 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

109 வேட்பு மனுக்கள் ஏற்பு

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 23-ந் தேதி நடைபெறுகிறது. அந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி தொடங்கி கடந்த 6-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை (தனி), விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது.

இந்த தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் கந்தர்வகோட்டை (தனி) 10 பேரும், விராலிமலையில் 26 பேரும், புதுக்கோட்டையில் 30 பேரும், திருமயத்தில் 14 பேரும், ஆலங்குடியில் 14 பேரும், அறந்தாங்கியில் 15 பேரும் போட்டியிடுகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வாரியாக வேட்பாளர் பட்டியல் விவரம் வருமாறு:-

கந்தர்வகோட்டை (தனி)

சின்னதுரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), உதயகுமார் (பா.ஜ.க.), நதியா தமிழரசன் (நா.த.க.), சுப்பிரமணியன் (த.வெ.க.), தனராசு (நமது மக்கள் கட்சி) மற்றும் சுயேச்சைகள் அருண்குமார், சசீக்குமார், செந்தில்குமார், முருகேசன், லெட்சுமணன்.

அறந்தாங்கி

ராமச்சந்திரன் (காங்கிரஸ்), கவிதா ஸ்ரீகாந்த் (பா.ஜ.க.), முத்துலெட்சுமி (நா.த.க.), முகமது பர்வேஸ் (த.வெ.க.), நஜிம் கான் (தமிழக வாழ்வுரிமை கட்சி) மற்றும் சுயேச்சைகள் அப்துல் ஜபார், அய்யப்பன், அருணகிரி, உடையப்பன், கார்த்திகேயன், காளிமுத்து, சாகுல் ஹமீது, சுந்தர், தட்சிணாமூர்த்தி, முருகரெத்தினம்.

ஆலங்குடி

மெய்யநாதன் (தி.மு.க.), தனவிமல் (அ.தி.மு.க.), ராஜாராம் (நா.த.க.), கந்தசாமி (த.வெ.க.), சுரேஷ் (ஓ.பி.சி.மக்கள் உரிமைக்கான கட்சி), புஷ்பராஜ் (அ.பு.ம.மு.க.), மலையாண்டி (அ.இ.ம.ம.க.) மற்றும் சுேயச்சைகள் கண்ணதாசன், சசிக்குமார், செல்வம், திருமாறன், நாகராசன், முருகேசன், வான்மீக நாதன்.

புதுக்கோட்டை

முத்துராஜா (தி.மு.க.), ராமச்சந்திரன் (பா.ஜ.க.), எழிலரசி விஜயேந்திரன் (நா.த.க.), சரீப் (த.வெ.க.), ராமலிங்கம் (ஓ.பி.சி.மக்கள் உரிமைக்கான கட்சி, மடிக்கணினி), நியாஸ் அகமது (தமிழக வாழ்வுரிமை கட்சி), மணிமேகலை (சி.பி.எம் லெனினிஸ்ட் லிபரேசன்), ரெங்கன் (புதிய தமிழகம்) மற்றும் சுயேச்சைகள் ராஜசேகர், அறிவழகன், கங்காதரன், சி.கருப்பையா, கருப்பையா, கைலாச குமார், கோவிந்தசாமி, சிவக்குமார், சுபரேஷ் ராஜா, செந்தில்நாதன், செல்வராஜ், தனகோபால், துரை சரவணன், முத்துக்குமார், முத்துராஜ், முருகேசன், ரமேஷ், ராதாகிருஷ்ணன், சி.ராமச்சந்திரன், சி.ராமச்சந்திரன், ர.ராமச்சந்திரன், ஜெயக்குமார்.

திருமயம்

ரகுபதி (தி.மு.க.), வைரமுத்து (அ.தி.மு.க.), லெட்சுமி சீனிவாசன் (நா.த.க.), சிந்தாமணி (த.வெ.க.), சுப்பையா (புதிய தமிழகம்), முத்துக்கருப்பன் (ஓ.பி.சி.மக்கள் உரிமைக்கான கட்சி), ராம்சிங் (தமிழக வாழ்வுரிமை கட்சி), ராஜா, (அ.பு.ம.மு.க.) மற்றும் சுயேச்சைகள் ஈஸ்வர், சதீஷ்குமார், சின்னத்தம்பி, சுப்பிரமணியன், துரைராஜன், ராம்நாத்.

விராலிமலை

செல்லப்பாண்டியன் (தி.மு.க.), விஜயபாஸ்கர் (அ.தி.மு.க.), சத்திய லெட்சுமி (நா.த.க.), முருகேசன் (த.வெ.க.), கார்த்திகா பிரகாஷ் (அ.பு.ம.மு.க.), செல்வராஜ் (புதிய தமிழகம்) மற்றும் சுயேச்சைகள் பழனிச்சாமி, அடைக்கலராஜ், அழகர், சந்திர ஜோதி, சுப்பையா, திருமுருகன், திருமுருகன், திருவேந்திரன், பழனிச்சாமி, பாலசுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன், பாலவேல் முருகேசன், மகேந்திரன், மணிகண்டன், மதியழகன், ராஜா, வீரமணி, வீரமணி, ஜெயகாந்தி, ஜோதி வேல்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 தொகுதிகளில் மொத்தம் 109 வேட்பாளர்கள் ேபாட்டியிடுகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments