தேர்தல் நாளான 23-ந்தேதியன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தங்கராசு வெளியிட்டு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அனைத்து நிறுவனங்கள்
சென்னை தொழிலாளர் ஆணையர் உத்தரவின்படியும், திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் திவ்வியநாதன் மற்றும் திருச்சி தொழிலாளர் இணை ஆணையர் லீலாவதி வழிகாட்டுதலின் படியும், வருகிற 23-ந்தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் பொருட்டு, அனைத்து வணிக நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பீடி நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி, ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் தேர்தல் நடைபெறும் நாளான 23-ந்தேதி சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135 பி-இன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.
புகார்
இது தொடர்பாக தொழிலாளர்கள் புகார் அளிக்க ஏதுவாக புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. எனவே, விடுமுறை தொடர்பான புகார்கள் இருந்தால் புதுக்கோட்டை, தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் கவுரி 99657 68060, முத்திரை ஆய்வாளர் பழனியம்மாள்- 97889 92009. தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், பிச்சைமணி- 98941 50578, ராஜாத்தி-96555 44944, ராமமூர்த்தி- 86103 86206 ஆகியோரின் செல்போன் எண்களை தொடர்பு கொண்டு தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.