தமிழகத்தில் கடந்த 2021ல் 73.63% என்கிற அளவுக்கு வாக்குப்பதிவு இருந்தது. இந்நிலையில், இந்த முறை 82.72%ஐ வாக்குப்பதிவு தாண்டினால்தான், தமிழகத்தில் கடந்த முறையை விட அதிக வாக்குகள் பதிவாகியிருக்கிறது என்று அர்த்தம்.
அதெப்படி 73.63%ஐ தாண்டினாலே கூடுதலாக வாக்குகள் பதிவாகியிருக்கிறது என்றுதானே அர்த்தம்! என சந்தேகம் எழலாம். 82.72% என பெஞ்ச்மார்க் வைத்திருப்பதற்கு காரணம், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட எஸ்ஐஆர் பணிகள்தான்.
வாக்குப்பதிவு எண்ணிக்கைக்கும், சதவிகிதத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. உதாரணமாக ஒரு தொகுதியில் 1,000 வாக்காளர்கள் இருக்கிறார்கள் எனில், அவர்களில் 600 பேர் வாக்களித்தால், வாக்குப்பதிவு சதகிவிதம் 60% ஆகும். ஆனால், இந்த தொகுதியில் உள்ள வாக்களர்களில் 100 பேர் நீக்கப்பட்டுவிட்டார்கள், பின்னர் மீதமுள்ள 900 பேரில், 600 பேர் வாக்களிக்கிறார்கள் எனில், வாக்கு சதவிகிதம் 66.6% ஆக உயரும். காரணம் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை குறைவு.
இந்த கணக்கை அப்படியே தமிழ்நாடு முழுவதற்கும் பொருத்தி பார்ப்போம். அதாவது, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6,37,07,380 (6.37 கோடி). பதிவான வாக்குகள், 4,69,07,743 (4.69 கோடி). அப்படியெனில் வாக்கு சதவிகிதம் 73.634% ஆகும்.
தற்போது தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு, வாக்காளர்களின் எண்ணிக்கை 5,67,07,380 (5.67 கோடி) என குறைந்திருக்கிறது. இதில் கடந்த முறையை போல 73.63% வாக்குகள் பதிவாகியிருக்கிறது எனில், உண்மையில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 4,17,53,644 (4.17) என குறைந்திருக்கிறது என்று அர்த்தம்.
கடந்த முறை பதிவான வாக்குகளே, இந்த முறையும் பதிவானால் தமிழ்நாட்டின் மொத்த வாக்குப்பதிவு சதவிகிதம் 82.72% என உயர்ந்து இருக்கும்.
வெறும் சதவிகிதம் மட்டும் அதிகரித்திருக்கும், ஆனால் எண்ணிக்கை அதே அளவில்தான் இருக்கும். அப்படியெனில், தமிழகத்தில் குறைந்தது 4,69,07,744 பேர் (2021 தேர்தலில் வாக்களித்தவர்களை விட ஒருவர் கூடுதலாக) வாக்களிக்க வேண்டும். அப்படி அளித்தால்தான் வாக்குப்பதிவு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்று அர்த்தம். இந்த சதவிகிதம் எப்போது 82.72%-ஐ தாண்டுகிறதோ அப்போதான் வாக்குப்பதிவு அதிகரித்திருக்கிறது என்று புரிந்துக்கொள்ளலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.