கோட்டைப்பட்டினம் மீனவர் காலனி பள்ளியில் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் கொண்டாட்டம்



புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டார வள மையத்திற்கு உட்பட்ட கோட்டைப்பட்டினம் மீனவர் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்நிகழ்விற்கு, மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சிவயோகம் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் மதியழகன் முன்னிலை வகித்தார்.

ஆயத்த பயிற்சி மையத்தில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பலூன் உடைத்தல், ரொட்டி கடித்தல், தண்ணீர் பாட்டில் நிரப்புதல், உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் மற்றும் வரைதல் உள்ளிட்ட போட்டிகளில் மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர்கள் சசிகுமார், பன்னீர்செல்வன், இயன்முறை மருத்துவர் செல்வகுமார், சிறப்பு ஆசிரியர்கள் மணிமேகலை, கோவேந்தன், நதியா மற்றும் உதவியாளர் அம்மாபொண்ணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். போட்டிகளில் பங்கேற்ற சிறப்பு மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments