பட்டுக்கோட்டை நகராட்சி பேருந்து நிலையத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வரும் ஆகஸ்ட் 1 (01.08.2026) முதல் அனைத்து பேருந்துகளும் நரியம்பாளையம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என பட்டுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இணைந்து அறிவித்துள்ளன.
பொதுமக்கள் மற்றும் பயணிகளின் வசதிக்காக, பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பேருந்துகளுக்கான புதிய வழித்தட மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:
முக்கிய பேருந்து வழித்தடங்கள்:
கும்பகோணம், மன்னார்குடி, மதுக்கூர் மார்க்கம்
செல்லும் வழி: நகர எல்லை கைகாட்டி, மைனர்பங்களா, இரயிலடி, பழைய பேருந்து நிலையம் வெளிப்புறம், மணிக்கூண்டு, அறந்தாங்கி முக்கம், சாமியார் மடம், பாளையம், புதிய பேருந்து நிலையம்.
மறு மார்க்கம்: புதிய பேருந்து நிலையம் பாளையம், சாமியார் மடம், போஸ்ட் ஆபீஸ், மணிக்கூண்டு, மைனர்பங்களா, கைகாட்டி.
நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், முத்துப்பேட்டை மார்க்கம்
செல்லும் வழி: கைகாட்டி, மைனர்பங்களா, இரயிலடி, பழைய பேருந்து நிலையம் வெளிப்புறம், மணிக்கூண்டு, அறந்தாங்கி முக்கம், சாமியார் மடம், பாளையம், புதிய பேருந்து நிலையம்.
மறு மார்க்கம்: புதிய பேருந்து நிலையம், பாளையம், சாமியார் மடம், போஸ்ட் ஆபீஸ், மணிக்கூண்டு, மைனர்பங்களா, கைகாட்டி.
அதிராம்பட்டினம் மார்க்கம்
செல்லும் வழி: கரிக்காடு, இரயிலடி, பழைய பேருந்து நிலையம் வெளிப்புறம், மணிக்கூண்டு, அறந்தாங்கி முக்கம், சாமியார் மடம், பாளையம், புதிய பேருந்து நிலையம்.
மறு மார்க்கம்: புதிய பேருந்து நிலையம், பாளையம் சாமியார் மடம், போஸ்ட் ஆபீஸ், மணிக்கூண்டு, நேரடியாக பழைய பேருந்து நிலையம் வழியாக அதிராம்பட்டினம்.
தஞ்சாவூர் மார்க்கம்
தஞ்சாவூர் மார்க்கமாக வரும் பேருந்துகள் பாளையம் வழியாக புதிய பேருந்து நிலையத்திற்குச் சென்று சேரும்.
இராமநாதபுரம், பேராவூரணி, புதுக்கோட்டை, காரைக்குடி, மதுரை மார்க்கம்
அறந்தாங்கி முக்கம், சாமியார் மடம், பாளையம் வழியாக புதிய பேருந்து நிலையத்தை சென்றடையும்.
பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சிறப்பு ஏற்பாடு
பள்ளி வேலை நாட்களில் மாணவ-மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, காலை மற்றும் மாலை நேரங்களில் நகரப் பேருந்துகள் சாமியார் மடம், போஸ்ட் ஆபீஸ், மணிக்கூண்டு மற்றும் அறந்தாங்கி முக்கம் வழியாக இயக்கப்படும். பள்ளி நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் வழக்கமான வழித்தடங்களில் இயங்கும்.
நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள்
பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த தற்காலிக வழித்தட மாற்றங்களை அறிந்து ஒத்துழைப்பு நல்குமாறு பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையாளர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.