கோடை வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் தற்காப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கலெக்டர் அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வெயில் தாக்கம் அதிகம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகரித்து அதிக வெப்பநிலை நிலவக்கூடும். இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்கும் படியும் கீழ்கண்டவாறு தற்காப்பு வழிமுறைகளை தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை அத்தியாவசிய பணிகள் இல்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தாகம் ஏற்படாமல் இருந்தாலும், உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தேனீர், காப்பி, கார்பனேட் குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்த்து ஓ.ஆர்.எஸ்., எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் அருந்த வேண்டும்.
பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியில் செல்லும் போது காலணிகளை கட்டாயம் அணிய வேண்டும். குடியிருக்கும் வீட்டை திரை சீலைகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி குளிர்ச்சியாக பாரமரிக்க வேண்டும். இரவில் ஜன்னல்கள் திறந்து காற்றோட்டத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும் போது குடையினை பயன்படுத்த வேண்டும். மயக்கம் அல்லது உடல் நலக்குறைவினை உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
முதியவர்களுக்கான வழிமுறை
தனியே வசிக்கும் முதியவர்கள் உடல் நிலையை தினமும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். முதியவர்கள் அருகாமையில் அவசர தேவைக்காக செல்போன் உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மதிய நேரத்தில் கண்டிப்பாக வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வெப்ப அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தோன்றினால், அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்க வேண்டும். குளிர்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும்.
கால்நடைகளுக்கு...
கால்நடைகளை நிழல் தரும் கூரை அடியில் கட்டவும், கால்நடைகளுக்கு போதிய நீர், தீவனம் இருப்பதை உறுதி செய்ய வேன்டும். கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்ட வெளியில் போட வேண்டாம்.
வீட்டில் வளர்க்கும் பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்துக் கொடுத்து நீர் கொடுக்க வேண்டும். செல்லப்பிராணிகளை வாகனங்களில் தனியே விட்டுச் செல்லக்கூடாது.
மண்எண்ணெய் விளக்குகளை...
பருவநிலை மாற்றங்களினால் இந்த ஆண்டு கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், மாடி வீடுகளிலும், கூரை வீடுகளிலும் உள்ள மின் வயர்கள் உருகி சார்ட் சர்க்யூட் ஏற்பட்டு அதில் ஏற்படும் தீப்பொறியினால் கூரை வீடுகள் எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. மேலும் மாடி வீடுகளில் மேல் கூரைகளில் ஏற்படும் அதிக வெப்பத்தினால் வீட்டின் உள்ளே மேற்புறம் உள்ள இரும்புகள் சூடாகி மின்விசிறி, டியூப்லைட் கழன்று கீழே விழும் அபாயம் உள்ளது. விலை உயர்ந்த பொருட்கள், நில ஆவணங்கள், சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். கியாஸ் சிலிண்டர்களை இரவில் கழற்றி வைப்பது நல்லது. விறகு அடுப்புகளை பயன்படுத்திய பிறகு தண்ணீர் ஊற்றி அணைத்து விட வேண்டும். மண்எண்ணெய் விளக்குகளை கவனமாக கையாள வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.